Thursday, September 25, 2008

Question and Answer - AMR- This week Kumudam Jothidam

திரு...................
பெருந்துறை.

கேள்வி : எனக்கு வயது 57. என் மனைவிக்கு வயது 50. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். எனது மூத்த மகள் 2003-ல் எங்களுக்குத் தெரியாமல் ஒரு கிறிஸ்தவப் பையனைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டாள். இந்தச் சம்பவத்தால் எங்களது பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் என அனைவரும் எங்களை விட்டு விலகி விட்டனர். எனது தாய் காலமானபோது, அந்திமக்கிரியைகூட நான் செய்யக்கூடாது என்று எனது தந்தையும், சகோதரிகளும் ஊரார் முன் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்தினார்கள்.

கிறிஸ்தவப் பையனைக் காதல் திருமணம் செய்துகொண்ட எனது மூத்த மகள் மூன்றாவது மாதத்திலேயே கர்ப்பிணியாகி எங்களிடமே திரும்பி வந்துவிட்டாள். 2004-ல் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவள் காதலித்துக் கைப்பிடித்த அந்தக் கிறிஸ்தவ கணவனோ அல்லது அவனைச் சார்ந்தவர்களோ குழந்தையைக்கூட வந்து பார்க்கவில்லை. காவல்துறையிடம் அவர்களுக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, அவளது கணவன் வீட்டார் நீதிமன்றத்தில் விவாகரத்து பெறுவதற்கான ஒப்பந்தம் தயார் செய்து என் மகளை ஒதுக்கி வைத்துவிட்டனர். எங்களுக்குப் பணபலமோ அல்லது ஆள்பலமோ இல்லாததால் விதி விட்ட வழி என்று வாழ்ந்து வந்தோம். இக்காலகட்டத்தில் எனது மகள், தான் செய்த தவறை நினைத்து தற்கொலைக்கு முயன்றாள். தக்க தருணத்தில் அவளைக் காப்பாற்றி விட்டோம்.

2006-ல் என் மகள், நான் எவ்வளவோ புத்திமதி கூறியும் கேட்காமல், மீண்டும் அவளது கிறிஸ்தவக் கணவனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தாள். குழந்தையை மட்டும் நாங்கள் வளர்த்து வந்தோம். பேரனைக் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக என் மகளை அடித்துத் துன்புறுத்தி, எங்களிடம் இருந்த பேரனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டனர்.

எங்களுக்கு ஆறுதல் கூற ஒரு ஜீவனும் இல்லாத நிலையில் தங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். எங்கள் பேரன் எங்களிடம் திரும்பி வருவானா? எனது கடன் தொல்லைகள் எப்போது தீரும்? முதல் மகள் ஒரு கிறிஸ்தவப் பையனை மணந்ததால் தடைபட்டுள்ள எனது இரண்டாவது மகளின் திருமணம் எப்போது நடைபெறும்?

பதில் :மதமாற்றம் என்ற தீயில் கருகித் துடிக்கும் இந்துக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் ஏற்கெனவே பலமுறை ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களுடன் விவரித்துள்ளபடி மதமாற்ற முயற்சிகளில் ஒன்றுதான், இந்துப் பெண்களைக் காதலிக்கும்படியும், அதன்மூலம் அப்பெண்களை மதமாற்றம் செய்யும்படியும் அவர்களது வாரப் பிரார்த்தனைக் கூட்டங்களில் வற்புறுத்தி வருவதும் அனைவருக்கும் தெரியும். இது மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக ஏராளமான இந்துக் குடும்பங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் விளைவுதான், இதுவரை மதமாற்றம் எனும் திட்டமிட்ட அட்டூழியத்தைப் பொறுத்துவந்த இந்துக்கள், இனி பொறுக்க இயலாத மனநிலையில் இப்போது உள்ளனர்.

`மதமாற்றத்தின் மூலம் இந்து சமூகத்தை அழிப்பதற்கு எங்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும்' என்றல்லவா மற்ற சமூகத்தினர் கேட்கிறார்கள்! இது எவ்விதத்தில் நியாயமாகும்? எத்தனை காலம்தான் இந்த அநீதியை மக்கள் பொறுத்துக்கொள்வார்கள்? ஒருவர் விருப்பப்பட்டால் எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் மாறட்டும். ஆனால் வெளிநாடுகளிலிருந்து பணத்தைக் கொண்டுவந்து குவித்து, உலகின் ஒப்பற்ற இந்து மதத்தைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி ஏதோ தங்கள் மதம் ஒன்றுதான் மதம் என்றும், அதுமட்டும்தான் சொர்க்கத்தைத் தரும் என்றும் பிரசாரம் செய்து வரும் ஆணவத்தை இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று சுயநலம் பிடித்த நம் அரசியல்வாதிகள் எதிர்பார்த்தால் அது நடக்காது. இதுவரை மதமாற்றம் செய்திருப்பதோடு திருப்தி அடையட்டும். இனி வேண்டாம்.

இவர்களுக்குத் துணிவிருந்தால் சவுதி அரேபியாவிலோ அல்லது எகிப்திலோ அல்லது ஈரானிலோ அல்லது துருக்கியிலோ மதம் மாற்றம் செய்து பார்க்கட்டுமே! செய்வார்களா? முயற்சி செய்தால் இவர்கள் தலை இவர்கள் கழுத்திலிருக்காது என்பது இவர்களுக்குத் தெரியும். இந்தியர்கள்தான் இளிச்சவாயர்கள்! இங்குள்ள அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கமுடியும் என்ற ஆணவத்தினால்தான் மதமாற்ற முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

நிற்க, ஏமாற்றத்திற்குள்ளான உங்கள் மகளை நினைத்து நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம். அக்கிரமத்தை உடனுக்குடன் அழித்து தர்மத்தை நிலை நாட்டுபவர் ஸ்ரீயோக நரசிம்மன்! அவரைப் பூஜித்து வாருங்கள். விரைவில் நல்வழிகாட்டுவார். 2009 சித்திரை முடிவதற்குள் தங்கள் இரண்டாவது மகளுக்கு திருமணம் நடந்துவிடும். கவலைப்படாதீர்கள்.

Conversion

இந்திய அரசாங்கம் கடைப்பிடித்து வரும் ஒருதலைப்பட்சமான கொள்கைகளினால், எதிர்காலத்தில் நம் நாடு எப்படி இருக்கப்போகிறது என்பதை எடுத்துக்காட்டி, எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சிகள்தான், தற்போது ஒரிசா, பெங்களூரு, தவணகரே, மங்களூரு, உடுப்பி மற்றும் கேரளத்தின் காஸர்கோடு ஆகிய இடங்களில் நிகழ்ந்துவருபவை!

`மதச்சார்பின்மை நாடு' என்று பேச்சளவில் கூறிக்கொண்டு, குறிப்பிட்ட சில மதத்தினர்களுக்கு மட்டும் ஏராளமான சலுகைகளை நம் இந்திய அரசாங்கம் வாரி வழங்கி வருகிறது. அதுவும் வெளிப்படையாகவே செய்து வருகிறது. `மதச்சார்பின்மை' என்ற உபதேசம் இந்துக்களுக்கு மட்டும்தான். இதனை எவரும் மறுக்கமுடியாது.

இத்தகைய அநீதியைப் பயன்படுத்திக்கொண்டு, அன்னிய மதத்தினர் தீவிர மதமாற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பம், குடும்பமாக, கிராமம், கிராமமாக மதமாற்றம் செய்து வருகின்றனர். இதற்காக, வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பணம் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.

தற்போது, இந்துக்களின் நிலை ‘survival’ என்ற நிலைக்கு வந்துவிட்டது. மதமாற்றம் என்னும் புற்றுநோய், இந்து சமூகத்தை அடியோடு நிர்மூலமாக்கி வருகிறது. பெரும்பாலான பத்திரிகைகள்கூட, செய்திகளை நியாயமாக வெளியிடாமல், அரசாங்கத்தைத் திருப்திபடுத்துவதற்காகவும், `இதர காரணங்களுக்காகவும்' ஒருதலைப் பட்சமாக செய்திகளை வெளியிட்டும், தலையங்கங்கள் எழுதியும் வருகின்றன.

இன்று, இந்து சமூகம் தனது தாய்நாட்டிலேயே அனாதையாகி நிற்கிறது!

மற்ற மதத்தினர் இன்று மதமாற்றத்தின் மூலம், பாரத புண்ணியபூமியைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டு வருகின்றனர். இவ்விதம் திட்டமிட்டுச் செய்ததன் விளைவுதான் பாகிஸ்தானை உருவாக்கிய அக்கிரமம்.

எத்தனை காலத்திற்குத்தான் பொறுமையாக இருப்பது? டில்லி மாநகரமே வெடிகுண்டுகளுக்கு இலக்காகி, ஒரு பாவமும் அறியாத பலர் உயிரிழந்தபோது, `மத நல்லிணக்கம் அவசியம்' என்று பேசியிருக்கிறார் நமது உள்துறை அமைச்சர்!

இந்தப் போலி, சுயநல நாடகம் இனி போதும். `தீவிரவாதம், மதமாற்றம் ஆகிய புற்றுநோய்களைக் குணப்படுத்துங்கள்' என அரசியல் பிரமுகர்களை வேண்டிக் கொள்கிறோம். இனியாவது தாய்நாட்டைப் பற்றி நினையுங்கள். நோயைக் குணப்படுத்துவதை விட்டுவிட்டு நோயாளியைக் குறை கூறுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

மதமாற்றத்திற்கு அவசியம் என்ன?

நாம் பலமுறை சுட்டிக்காட்டியபடி,உலகில் மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்பிலிருந்தே இந்து மதம் தழைத்தோங்கி வந்துள்ளது.

மற்ற மதங்கள் பிற்காலத்தில் வந்தவைதான். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதங்களின் பிரசாரகர்கள், ஏதோ இந்துக்கள் காட்டுமிராண்டிகள் போல வாழ்ந்து வந்தது போலவும், இவர்கள்தான் கல்வியைக் கொடுத்து நாகரிக மக்களாக மாற்றியதைப் போலவும் ஆணவம் பிடித்துப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இவர்களின் மதம் ஒன்றின் மூலம் மட்டும்தான் மோட்சம் கிடைக்கும் என்றும், மற்றவர்கள் நரகத்திற்குத்தான் போவார்கள் என்றும் ஒலிபெருக்கிகள் மூலம் பிரசாரம் செய்துவருவது நகைப்பிற்கு இடமாகும்.

முதன்முதலில் சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு, தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வீக நூல்களின் சில வாசகங்களைச் சிறிது மாற்றி, தங்கள் மதப் பாடல்களைப் போல் தந்திரமாக மாற்றியவர், கிறிஸ்துவ மதபோதகரான Rev. Fr. Finlay என்பவர். இவர் மன்னார்குடியில் Finlay கல்லூரியை ஆரம்பித்து, அதன்மூலம் ஏராளமான மதமாற்றங்களைச் செய்தவர். அவருக்கு முன்பு, 1835-ம் ஆண்டு, w.o. சிம்ப்ஸன் என்பவர் `வெஸ்லி மிஷன்' என்ற மதமாற்ற நிறுவனத்தை நாகையில் தொடங்கி, Rev. Fr. Eliaiah Hoole என்பவர் மூலம் தஞ்சை ஜில்லாவில் பெரிய அளவில் மதமாற்றம் செய்தார். அன்று Fr. Finlay காட்டிய வழியைப் பின்பற்றி, பல இந்துமத நூல்கள் அவர்கள் மத நூல்கள் போல் மாற்றி எழுதப்பட்டன பிற்காலத்தில்! இந்துக்களின் குத்துவிளக்கு, ஆராதனை மணி போன்றவற்றில் உள்ள நந்தி, அனுமன், சங்கு, சக்கரம், மதச்சின்னங்கள் ஆகியவற்றை மாற்றி, அவர்களது மதச்சின்னங்களை அமைத்து வருவதும் அனைவருக்கும் தெரியும்.

பிற மதத்தினரைத் தரக்குறைவாகப் பேசினால் சட்டப்படி அது குற்றமாகும். ஆனால் இந்துக்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும், இந்து தெய்வீக நூல்களைப் பற்றியும் எவர் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் தரக்குறைவாகப் பேசலாம்.

அன்னியர்களின் படையெடுப்புகளின்போது இந்துக்கள் பட்ட கஷ்டங்கள், கொடூரமான அனுபவங்கள் ஆகியவற்றிற்குச் சரித்திரத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு இந்துக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. அவர்களுக்கு நீதி கிடையாது. இந்து சமூகத்தை அடியோடு மதமாற்றம் செய்து, அப்படி ஒரு சமூகமே கிடையாது என்ற நிலையை ஏற்படுத்த மற்ற மதத்தினர் திட்டமிட்டு, பண பலத்தினாலும், பல அரசியல் கட்சிகளின் மறைமுக மற்றும் நேரடி ஆதரவுடனும் செயல்பட்டு வருகின்றனர். இந்து மதத்தில் இல்லாத என்ன சிறப்பு இவர்கள் மதத்தில் உள்ளது? அப்பாவிகளான கோடிக்கணக்கான வயோதிகர்கள், பெண்கள், கைக்குழந்தைகள் ஆகியோருடன் ஹிரோஷிமா நகரை ஒரே விநாடியில் அழித்தது அந்த மதத்தைச் சார்ந்த நாடான அமெரிக்காதான். இத்தகைய கொடூரமான படுகொலையை என்றாவது பாரதம் செய்திருக்குமா?

அரசாங்கத்தின் இன்றைய பாரபட்சமான கொள்கையும், அநீதியும் நீடித்தால் வெகு விரைவில் தற்போது அவர்கள் பிற மதத்தினருக்குச் சலுகைகள் வழங்குவதற்காக `சிறுபான்மையினர்' என்ற முத்திரையினைப் பதித்து வருகிறார்களே! அந்நிலை மாறி இந்துக்கள் அவர்கள் நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறிவிடும் நாள் அதிக தூரத்தில் இல்லை. அவ்வளவு ஏன்? தற்போது நடைபெற்று வரும் வேகத்தில் மதமாற்றம் நீடித்தால் சிறுபான்மையினர் என்ற அளவிற்குக்கூட இந்து சமூகம் இருக்காது.

ஆதலால்தான், முழுமையாகத் தங்களை மற்ற மதத்தினர் அழித்து விடுவதற்கு முன்பு, தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக (survival) இந்து சமூகம் போராடி வருகிறது. அது தவறா?

நீதிக்கு மன்றாடும்,
ஏ.எம்.ஆர்.