Monday, October 5, 2009

annapoorani Slokam

காசி ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி!

இந்த உலகத்தில் எதையும் செய்து விடலாம். ஆனால், வயலில் இறங்கி வேலை செய்வது...? பெரிய காரியம்தான்! மழையை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்... போட்ட விதை நன்றாக முளைக்குமா? விவசாயிகளுக்கு மடுமல்ல... நமக்கும்தான் கவலை! மழை இருந்தால்தானே சாப்பாடு!

மழை பொழிவது, தெய்வத்தின் கையில் இருக்கிறது. அந்த தெய்வத்தை நாம் 'அன்னபூரணி' என்கிறோம். அன்னபூரணி விக்கிரகத்தை அரிசி பரப்பிய சிறு தட்டு ஒன்றில் வைத்து, ''தாயே! அம்மா, எங்கள் இல்லத்தில் உணவுக்கு பிரச்னை வராமல் அருள்புரி'' என்கிறோம்.

இதையே, ஆதிசங்கரர், ''கருணையின் வடிவாக இருக்கும் அன்னபூரணியே! பிச்சை இடு'' என்கிறார். இந்த உணவுப் பிச்சையை அவள் மட்டுமே தர முடியும். சிவனாருக்கே படியளந்தவள் ஆயிற்றே அவள்!

தீபாவளி அன்று, காசியில் அன்னபூரணியை லட்டு சப்பரத்தில் தரிசிக்கலாம். அன்று ஸ்பெஷலாக லட்டு பிரசாதம் தரப்படுகிறது.

அன்னபூரணியே கருணை கடாட்சம் அருள்வாய் என்று, இந்த தீபாவளியில், ஆதிசங்கரர் அருளிய அன்னபூரணி துதி சொல்லி, நல்ல மழை பெய்து, உணவுப் பொருள்கள் நன்கு விளைந்து, யாருக்கும் உணவுக்குக் கஷ்டம் வரக்கூடாது என்று, பொதுநலப் பிரார்த்தனையை முன்வைப்போம்.

தைத்ரீய உபநிஷதத்தின் ஆனந்தவல்லி சொல்கிறது... 'அன்னம் பஹுகுர்வீத:' அதாவது, 'அன்னத்தை மிகுதியாக உண்டாக்குங்கள்' என்று! இதுவே நம் தீபாவளி பிரார்த்தனை.

நித்ய ஆனந்தகரீ வர அபய கரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ
நிர்தூதாகில கோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்வரீ |
ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (1)

(ஆனந்தம் தருபவள்; அபய, வரத கரங்கள் கொண்டவள்; அழகுக் கடல்; நம் பாவத் தொகுப்புகளை நாசம் செய்பவள்; மஹேஸ்வரீ; ஹிமவான் வம்சத்தை தூய்மையாக்குபவள்; காசி நாயகி; பக்தர்களுக்கு கிருபை புரிபவளான அன்னபூரணித் தாயே... எங்களுக்கு பிட்சை இடு)

நானா ரத்ன விசித்ர பூஷணகரீ ஹேமாம்பராடம்பரீ
முக்தா ஹார விலம்பமான விலஸத் வக்ஷே£ஜ கும்பாந்தரீ |
காச்மீரா கருவாஸிதா ருசிகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (2)

(விசித்ர ரத்னாபரணம் அணிபவள்; பீதாம்பரத்தாலும், முத்து மாலையாலும் அலங்கரிக்கப் பட்டவள்; காஷ்மீர அகில் தூபம் சூழ, நறுமணம் நிரம்பப் பெற்றவள்; அழகை ஏற்படுத்தும் தாயே... பிட்சை இடு)

யோக ஆனந்தகரீ ரிபு க்ஷயகரீ தர்மைக நிஷ்டாகரீ
சந்த்ர அர்க அனலபா ஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷ£கரீ |
ஸர்வ ஐச்வர்யகரீ தப: பலகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (3)

(யோகானந்தம் தருபவள்; தர்மம் ஒன்றிலேயே சிந்தையை இருக்க வைப்பவள்; சந்திரன், சூரியன், அக்னிக்கு சமமான ஒளி பொருந்தியவள்; மூவுலகையும் காப்பவள்; அனைத்து விதமான செல்வங்களையும் தருபவள்; தவத்துக்கான பலத்தை அளிக்கும் தாயே... பிட்சை இடு! )

கைலாஸ அசல கந்தராலய கரீ கௌரீ ஹ்யுமா சங்கரீ
கௌமாரீ நிகமார்த்த கோசர கரீ ஹ்யோங்கார பீஜ அக்ஷரீ |
மோக்ஷ த்வார கவாடபாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (4)

(கயிலாச மலை குகையை வீடாகக் கொண்டவள்; பொன் நிறமுள்ளவள்; உமாதேவி; சங்கரன் துணைவி; இளமை பொருந்தியவள்; வேதப் பொருளை அறியச் செய்பவள்; ஓங்காரத்தை பீஜாட்சரமாகக் கொண்டவள்; மோட்ச வாசலை திறக்கும் தாயே... பிட்சை இடு!)

த்ருச்யா த்ருச்ய விபூதி வாஹன கரீ ப்ரம்மாண்ட பாண்டோ தரீ
லீலா நாடக ஸ¨த்ர கேல னகரீ விக்ஞான தீபாங்குரீ |
ஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதனகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (5)

(இக-பர சுகம் பெறக் காரணமாக இருப்பவள்; பிரமாண்டத்தை வயிற்றில் தாங்கியவள்; உலகியல் நாடகத்தை நடத்தும் சூத்ரதாரி; அனுபவ ஞான விளக்கின் சுடராக ஒளிர்பவள்; பரமசிவன் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளான தாயே... பிட்சை இடு!)

ஆதி க்ஷ£ந்த ஸமஸ்த வர்ணன கரீ சம்போஸ்த்ரி பாவா கரீ
காச்மீரா த்ரிபுரேச்வரீ த்ரி நயனீ விச்வேச்வரீ சர்வரீ |
ஸ்வர்க த்வார கவாடபாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (6)

(எல்லா எழுத்துகளுக்கும் காரணமானவள்; முத்தொழில் களின் தோற்றத்துக்கும் இருப்பிடமானவள்; குங்குமம் தரித்தவள்; திரிபுரம் எரித்த சிவனாரின் நாயகி; முக்கண் முதல்வனின் பத்தினி; லோகேஸ்வரி; சுவர்க்கலோக வாசல் கதவைத் திறக்கும் தாயே... பிட்சை இடு!)

உர்வீ ஸர்வ ஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ
வேணி நீல ஸமான குந்தலதரீ நித்ய அன்ன தானேச்வரீ |
ஸாக்ஷ£ன் மோக்ஷ கரீ ஸதா சுபகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (7)

(பூமி ரூபமாக இருப்பவள்; சர்வ ஜன ஈஸ்வரி; வெற்றி தருபவள்; கருணைக் கடல்; அழகிய பின்னலுடன் கருத்த கேசம் கொண்டவள்; அன்னதான நாயகி; மோட்சமும் மங்கலமும் அருளும் தாயே... பிட்சை இடு!)

தேவீ ஸர்வ விசித்ர ரத்ன ரசிதாதாக்ஷ£யணி ஸூந்தரீ
வாமா ஸ்வாது பயோதரா ப்ரியகரீ ஸெளபாக்ய மாஹேச்வரீ |
பக்தாபீஷ்டகரீ ஸதா ஸூபகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (8)

(விசித்ர ரத்னங்களால் பிரகாசிப்பவள்; தாட்சாயணி; அழகானவள்; ஈசனுக்கு பிரியமானதையே செய்பவள்; சௌபாக்கியத்துடன் கூடிய மகேசனின் பத்தினி; சுபமானதையே செய்யும் தாயே... பிட்சை இடு!)

சந்த்ர அர்க அனல கோடி கோடி ஸத்ருசீ சந்த்ராம்சு பிம்பாதரீ
சந்த்ர அர்க அக்னி சமான குண்டலதரீ சந்த்ர அர்க வர்ணேச்வரீ |
மாலா புஸ்தக பாச அங்குசதரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (9)

(கோடி சந்திர, சூரிய, அக்னிக்கு ஒப்பானவள்; சந்திர கலை போன்ற அழகிய கோவைப் பழ வதனம் கொண்டவள்; சந்திரன், சூரியன், அக்னிக்கு ஒப்பான பிரகாசமுள்ள குண்டலம் அணிந்து, மாலை, புஸ்தகம், பாசம், அங்குசம் ஆகியவை தரித்த தாயே... பிட்சை இடு)

க்ஷத்ர த்ராணகரீ மஹா பயகரீ மாதா க்ருபா ஸாகரீ
ஸர்வ ஆனந்தகரீ ஸதா சிவகரீவிச்வேச்வரீ ஸ்ரீதரீ |
தக்ஷ£ க்ரந்தகரீ நிரா மயகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (10)

(சத்திரியர் போல் காப்பவள்; பயத்தைப் போக்குபவள்; எல்லோருக்கும் மகிழ்ச்சியையே தருபவள்; எப்போதும் மங்கலமே தருபவள்; உலகநாதனின் பத்தினி; நோய் களைப் போக்குபவளான தாயே... பிட்சை இடு)

அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே |
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷ£ம் தேஹீ ச பார்வதி ||

(அன்னம் நிறைந்தவளே! பூரணமாக இருப்பவளே! சங்கரனின் பிராண நாயகியே! மாதா பார்வதியே! ஞான வைராக்கியம் ஏற்பட பிட்சை இடு!)

மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர: |
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம் ||

(எனக்குத் தாய்- பார்வதி! தந்தை- மகேஸ்வரன்! சொந்தங்கள்- சிவபக்தர்கள்! என் தேசம்- மூவுலகமே!)