Thursday, September 25, 2008

Conversion

இந்திய அரசாங்கம் கடைப்பிடித்து வரும் ஒருதலைப்பட்சமான கொள்கைகளினால், எதிர்காலத்தில் நம் நாடு எப்படி இருக்கப்போகிறது என்பதை எடுத்துக்காட்டி, எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சிகள்தான், தற்போது ஒரிசா, பெங்களூரு, தவணகரே, மங்களூரு, உடுப்பி மற்றும் கேரளத்தின் காஸர்கோடு ஆகிய இடங்களில் நிகழ்ந்துவருபவை!

`மதச்சார்பின்மை நாடு' என்று பேச்சளவில் கூறிக்கொண்டு, குறிப்பிட்ட சில மதத்தினர்களுக்கு மட்டும் ஏராளமான சலுகைகளை நம் இந்திய அரசாங்கம் வாரி வழங்கி வருகிறது. அதுவும் வெளிப்படையாகவே செய்து வருகிறது. `மதச்சார்பின்மை' என்ற உபதேசம் இந்துக்களுக்கு மட்டும்தான். இதனை எவரும் மறுக்கமுடியாது.

இத்தகைய அநீதியைப் பயன்படுத்திக்கொண்டு, அன்னிய மதத்தினர் தீவிர மதமாற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பம், குடும்பமாக, கிராமம், கிராமமாக மதமாற்றம் செய்து வருகின்றனர். இதற்காக, வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பணம் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.

தற்போது, இந்துக்களின் நிலை ‘survival’ என்ற நிலைக்கு வந்துவிட்டது. மதமாற்றம் என்னும் புற்றுநோய், இந்து சமூகத்தை அடியோடு நிர்மூலமாக்கி வருகிறது. பெரும்பாலான பத்திரிகைகள்கூட, செய்திகளை நியாயமாக வெளியிடாமல், அரசாங்கத்தைத் திருப்திபடுத்துவதற்காகவும், `இதர காரணங்களுக்காகவும்' ஒருதலைப் பட்சமாக செய்திகளை வெளியிட்டும், தலையங்கங்கள் எழுதியும் வருகின்றன.

இன்று, இந்து சமூகம் தனது தாய்நாட்டிலேயே அனாதையாகி நிற்கிறது!

மற்ற மதத்தினர் இன்று மதமாற்றத்தின் மூலம், பாரத புண்ணியபூமியைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டு வருகின்றனர். இவ்விதம் திட்டமிட்டுச் செய்ததன் விளைவுதான் பாகிஸ்தானை உருவாக்கிய அக்கிரமம்.

எத்தனை காலத்திற்குத்தான் பொறுமையாக இருப்பது? டில்லி மாநகரமே வெடிகுண்டுகளுக்கு இலக்காகி, ஒரு பாவமும் அறியாத பலர் உயிரிழந்தபோது, `மத நல்லிணக்கம் அவசியம்' என்று பேசியிருக்கிறார் நமது உள்துறை அமைச்சர்!

இந்தப் போலி, சுயநல நாடகம் இனி போதும். `தீவிரவாதம், மதமாற்றம் ஆகிய புற்றுநோய்களைக் குணப்படுத்துங்கள்' என அரசியல் பிரமுகர்களை வேண்டிக் கொள்கிறோம். இனியாவது தாய்நாட்டைப் பற்றி நினையுங்கள். நோயைக் குணப்படுத்துவதை விட்டுவிட்டு நோயாளியைக் குறை கூறுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

மதமாற்றத்திற்கு அவசியம் என்ன?

நாம் பலமுறை சுட்டிக்காட்டியபடி,உலகில் மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்பிலிருந்தே இந்து மதம் தழைத்தோங்கி வந்துள்ளது.

மற்ற மதங்கள் பிற்காலத்தில் வந்தவைதான். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதங்களின் பிரசாரகர்கள், ஏதோ இந்துக்கள் காட்டுமிராண்டிகள் போல வாழ்ந்து வந்தது போலவும், இவர்கள்தான் கல்வியைக் கொடுத்து நாகரிக மக்களாக மாற்றியதைப் போலவும் ஆணவம் பிடித்துப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இவர்களின் மதம் ஒன்றின் மூலம் மட்டும்தான் மோட்சம் கிடைக்கும் என்றும், மற்றவர்கள் நரகத்திற்குத்தான் போவார்கள் என்றும் ஒலிபெருக்கிகள் மூலம் பிரசாரம் செய்துவருவது நகைப்பிற்கு இடமாகும்.

முதன்முதலில் சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு, தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வீக நூல்களின் சில வாசகங்களைச் சிறிது மாற்றி, தங்கள் மதப் பாடல்களைப் போல் தந்திரமாக மாற்றியவர், கிறிஸ்துவ மதபோதகரான Rev. Fr. Finlay என்பவர். இவர் மன்னார்குடியில் Finlay கல்லூரியை ஆரம்பித்து, அதன்மூலம் ஏராளமான மதமாற்றங்களைச் செய்தவர். அவருக்கு முன்பு, 1835-ம் ஆண்டு, w.o. சிம்ப்ஸன் என்பவர் `வெஸ்லி மிஷன்' என்ற மதமாற்ற நிறுவனத்தை நாகையில் தொடங்கி, Rev. Fr. Eliaiah Hoole என்பவர் மூலம் தஞ்சை ஜில்லாவில் பெரிய அளவில் மதமாற்றம் செய்தார். அன்று Fr. Finlay காட்டிய வழியைப் பின்பற்றி, பல இந்துமத நூல்கள் அவர்கள் மத நூல்கள் போல் மாற்றி எழுதப்பட்டன பிற்காலத்தில்! இந்துக்களின் குத்துவிளக்கு, ஆராதனை மணி போன்றவற்றில் உள்ள நந்தி, அனுமன், சங்கு, சக்கரம், மதச்சின்னங்கள் ஆகியவற்றை மாற்றி, அவர்களது மதச்சின்னங்களை அமைத்து வருவதும் அனைவருக்கும் தெரியும்.

பிற மதத்தினரைத் தரக்குறைவாகப் பேசினால் சட்டப்படி அது குற்றமாகும். ஆனால் இந்துக்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும், இந்து தெய்வீக நூல்களைப் பற்றியும் எவர் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் தரக்குறைவாகப் பேசலாம்.

அன்னியர்களின் படையெடுப்புகளின்போது இந்துக்கள் பட்ட கஷ்டங்கள், கொடூரமான அனுபவங்கள் ஆகியவற்றிற்குச் சரித்திரத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு இந்துக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. அவர்களுக்கு நீதி கிடையாது. இந்து சமூகத்தை அடியோடு மதமாற்றம் செய்து, அப்படி ஒரு சமூகமே கிடையாது என்ற நிலையை ஏற்படுத்த மற்ற மதத்தினர் திட்டமிட்டு, பண பலத்தினாலும், பல அரசியல் கட்சிகளின் மறைமுக மற்றும் நேரடி ஆதரவுடனும் செயல்பட்டு வருகின்றனர். இந்து மதத்தில் இல்லாத என்ன சிறப்பு இவர்கள் மதத்தில் உள்ளது? அப்பாவிகளான கோடிக்கணக்கான வயோதிகர்கள், பெண்கள், கைக்குழந்தைகள் ஆகியோருடன் ஹிரோஷிமா நகரை ஒரே விநாடியில் அழித்தது அந்த மதத்தைச் சார்ந்த நாடான அமெரிக்காதான். இத்தகைய கொடூரமான படுகொலையை என்றாவது பாரதம் செய்திருக்குமா?

அரசாங்கத்தின் இன்றைய பாரபட்சமான கொள்கையும், அநீதியும் நீடித்தால் வெகு விரைவில் தற்போது அவர்கள் பிற மதத்தினருக்குச் சலுகைகள் வழங்குவதற்காக `சிறுபான்மையினர்' என்ற முத்திரையினைப் பதித்து வருகிறார்களே! அந்நிலை மாறி இந்துக்கள் அவர்கள் நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறிவிடும் நாள் அதிக தூரத்தில் இல்லை. அவ்வளவு ஏன்? தற்போது நடைபெற்று வரும் வேகத்தில் மதமாற்றம் நீடித்தால் சிறுபான்மையினர் என்ற அளவிற்குக்கூட இந்து சமூகம் இருக்காது.

ஆதலால்தான், முழுமையாகத் தங்களை மற்ற மதத்தினர் அழித்து விடுவதற்கு முன்பு, தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக (survival) இந்து சமூகம் போராடி வருகிறது. அது தவறா?

நீதிக்கு மன்றாடும்,
ஏ.எம்.ஆர்.

No comments: